பன்னிரண்டாம் வகுப்பில் குக் வித் கோமாளி ஷிவாங்கி இவ்வளவு மதிப்பெண் வாங்கி உள்ளாரா.? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..

0
shivangi
shivangi

சின்னத்திரையில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்த பிரபலங்களில் ஒருவர்தான் ஷிவாங்கி இவர் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி முதல் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து தற்பொழுது நான்காவது சீசன் வரை இதில் கலந்துகொண்டு வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் இவரது குறும்புத்தனம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் பல ரசிகர்களும் இவருக்கு நல்ல வரவேற்பு தந்தார்கள். அதிலும் குறிப்பாக இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும் மாறிவிட்டார்.

அவ்வாறு பார்த்தால் இவர் ஒரு சில திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். மேலும் இவர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி மட்டுமல்லாமல் பாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பாடும் விதம் அனைவருக்குமே பிடிக்கும்.

இந்நிலையில் நடிகை ஷிவாங்கி 12ஆம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இவர் படிக்கும் பொழுது 1200 க்கு 1112 மதிப்பெண்கள் பெற்றதாக இவரே ஒரு பேட்டியில் தெரிவித்தாராம். ஆனால் இவர் கல்லூரியில் படிக்கும் பொழுது அதிகமாக சூட்டிங் சென்று விட்டதால் நிறைய பாடங்களில் அரியர் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் பன்னிரண்டாம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறுவது மட்டுமல்லாமல் பலரும் இவர் காலேஜ் படிக்கும் பொழுது அதிகமாக சூட்டிங் செல்லாமல் இருந்தால் அங்கேயும் நிறைய மதிப்பெண்கள் கண்டிப்பாக பெற்றிருப்பார். எனவும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இவர் புதிதாக திரைப்படங்களில் நடிக்கிறாரா என கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

shivangi
shivangi