அதுலபாதி இதுலபாதி புருட்மிக்சர் போல உருவாகும் அண்ணாத்த திரைப்படம்.!

0

தமிழ் சினிமா உலகில் தற்போது உள்ள நடிகர்களுக்கெல்லாம் குருவாக விளங்குபவர் ரஜினி இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி  ரஜினியுடன் இணைந்து குஷ்பு,மீனா,நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி,சதீஷ் போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த படப்பிடிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து வருகிறார்.

rajini
rajini

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி வரும் மாஸ்டர் திலீப் சுப்பராயன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்த படம் குறித்து கூறியுள்ளாராம்.

அதில் அவர் அண்ணாத்த திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கும் முதல் பாகம் படையப்பா என்றும் இரண்டாம் பாகம் பாட்ஷா என்றும் அற்புதமாக இருக்கும் இதில் ரஜினி டூப் போடாமல் நடித்து அசத்தி இருக்கிறார் என கூறியுள்ளாராம்.

மேலும் இந்த தகவல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.