அஜித்திடமே ஷாலினி பற்றி பத்த வைத்த ரமேஷ் கண்ணா.! இந்த படத்தில் நடிக்கணுமா இல்ல கிளம்பனுமா மிரட்டி விட்ட இயக்குனர்… சுவாரசியமான தகவல்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரபலம் தான் பிரியங்கா இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார். மேலும் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தற்பொழுது இவருக்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார் மியூசிக் என்ற ஷோவை இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தை வைத்து தான் இந்த வாரம் போட்டிகள் நடத்தி உள்ளார் அப்பொழுது நடிகர் அஜித் பிரியங்காவிற்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் அந்த மெசேஜ்களையும் மேடையில் வைத்து அவர் போட்டி காட்டி பல கேள்விகளை போட்டியாளர்களிடம் கேட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதில் நடிகர் அஜித் வாய்ஸ் கொடுத்தது போல ஹாய் பிரியங்கா ஸ்டார் மியூசிக் சூப்பரா பண்றீங்க என்னோட பர்த்டேவ செலப்ரேட் பண்றீங்க சந்தோஷம் ஸ்டார் மியூசிக்ல இருக்கிறவங்க எல்லாத்துக்குமே ஒரு ஹாய் என்று கூறியது மட்டுமல்லாமல் தொகுப்பாளனி பிரியங்கா நடிகர் அஜித்திடம் அவரது காதல் கதையை பற்றி கேட்டாராம்.

அதற்கு வெளிவந்த நடிகர் அஜித்தின் வாய்ஸ் என் லவ் ஸ்டோரி பத்தி கேட்டீங்கல்ல என் லவ் ஸ்டோரியை பற்றி தெரிந்தவர் ஒருத்தர் அங்க இருக்காரு என்று நடிகர் அஜித் வாய்ஸ் வெளிவந்ததும் போட்டியில் பங்கேற்ற பல பிரபலங்களும் உடனே நடிகர் ரமேஷ் கண்ணாவை கை காட்டினார்கள் மேலும் வந்த போட்டியில் நடிகர் ரமேஷ் கண்ணா நடிகர் அஜித்தும்,ஷாலினியும் பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார்.

அதில் நடிகர் ரமேஷ் கண்ணா அமர்க்களம் ஷூட்டிங் செஞ்சி கோட்டையில் நடக்கிறது அப்பொழுது அஜித்தும் மற்றும் நடிகை ஷாலினி ஆகிய இருவரும் பார்த்து பார்த்து சிரித்துக் கொள்வார்கள். அப்பொழுது எல்லாம் எனக்கு தெரியாது நான் அப்பொழுதே நடிகர் அஜித்திற்கு அட்வைஸ் செய்தேன் சினிமாவில் இருக்கும் பொண்ணுங்களை மட்டும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிடாத என அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருந்தேன்.

இதை கவனித்த இயக்குனர் சரண் மானிட்டரில் பார்த்துவிட்டு நடிகர் ரமேஷ் கண்ணா அவர்களை கூப்பிட்டாராம் ரமேஷ் கண்ணா என்ன பண்ணிட்டு இருக்கீங்க என சரண் கேட்க அதற்கு பதில் அளித்த நடிகர் ரமேஷ் கண்ணா இல்லப்பா அஜித்திற்கு வந்து அட்வைஸ் பண்ணிகிட்டு இருந்தேன் எனக் கூறியதும் சரண் அவர்கள் என்ன அட்வைஸ் என்று கேட்டாராம் அதற்கு நடிகர் ரமேஷ் கண்ணா சும்மாதான் யாரையும் லவ் பண்ணாத என அஜித்திடம் கூறினாராம்.

அப்பொழுது சரண் அவர்கள் அஜித்தும்,ஷாலினியும் லவ் பண்ணிக்கிட்டு இருக்காங்க தெரியுதா உனக்கு அடுத்த மாதம் கல்யாணம் ரொம்ப பேசிக்கிட்டு இருந்த அடுத்த படத்துல இருக்க மாட்ட என சரண் அவர்கள் நடிகர் ரமேஷ் கண்ணாவை மிரட்டினாராம் மேலும் இதில் நடிகர் ரமேஷ் கண்ணா பல தகவல்களை ரசிகர்களுக்கு கூறியுள்ளார் அந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

Leave a Comment