மொத்த படப்பிடிப்பையும் வெறும் இத்தனை நாட்களிலேயே முடிக்க பிளான் போட்டிருக்கும் அஜித்.? எப்பொழுது தொடங்குகிறது தெரியுமா.?

தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும்,தனக்கென ஒரு புகழையும் தேடிக்கொண்டவர் நடிகர் அஜித் இவரது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இருப்பினும் தன்னம்பிக்கையோடு இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி அடைந்து விட்டது என்றே கூறலாம் மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து இருந்தது.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்கத்தில் விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் பொதுவாகவே நடிகர் அஜித் தனக்கான ஓய்வு தேவைப்பட்டால் உடனே பைக் ரைட் போன்றவற்றில் ஈடுபடுவார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

வலிமை திரைப்படம் உருவாகி வரும் பொழுது கூட நடிகர் அஜித் பைக் ரைட் சென்ற பொழுது எடுத்த புகைப்படங்களை நாம் சமூக வலைதள பக்கங்களில் பார்த்திருப்போம். ஆனால் தற்பொழுது கடந்த சில நாட்களாகவே அவர் நேபாளத்தில் இருக்கிறாராம் அதாவது அங்கு இவர் ரசிகர்களை சந்திக்கும் போது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

மேலும் விடா முயற்சி திரைப்படம் மே மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்றும் எழுபது நாட்களில் மொத்த படப்பிடிப்பை முடிக்க நடிகர் அஜித் ப்ளான் போட்டுள்ளாராம். அது மட்டுமல்லாமல் இவருக்கு 40 நாள் கால்ஷீட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ajith
ajith

இதனை தொடர்ந்து பார்த்தால் 70 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடியுமா என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் பல ரசிகர்களும் கண்டிப்பாக நடிகர் அஜித் முடித்து விடுவார் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment