நடிகர் அஜித்தை சினிமாவில் தூக்கிவிட்ட முறையான 10 திரைப்படங்கள்.! அதிலும் அஜித்தின் 50வது படம் வேற லெவல் ஆச்சே..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு திரைப்படம் ஹிட் ஆகவில்லை என்றால் உடனே கதாநாயகன் சரியாக நடிக்கவில்லை கதையும் சுத்தமாக நல்லா இல்லை என்று பல காரணங்களுடன் விமர்சித்து விடுவார்கள். ஆனால் தனது திரைப்பயணத்தில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து தன்னம்பிக்கை நட்சத்திரமாக தற்பொழுது வளர்ந்து நிற்கும் நடிகர் தான் அஜித்.

இவரது திரைப்பயணத்தில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து பின்பு ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு கை கொடுத்து விட்டது என்றே கூறலாம்.அந்த வகையில் பார்த்தால் இன்று பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் அஜித்திற்கு பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இவர் அடுத்ததாக நடிக்கப் போகும் விடாமுயற்சி டைட்டில் வெளிவந்ததால் ரசிகர்களும் தற்பொழுது கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். பொதுவாகவே நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தாலும் இவர் தனது ஆரம்ப காலகட்ட திரைப்படங்களில் நடிக்கும் பொழுது ஃபிளாப் படங்களையும் கொடுத்துள்ளார்.

ஆனால் இவரை தமிழ் சினிமாவில் எங்கேயோ தூக்கி சென்ற 10 திரைப்படங்களை பற்றி தான் நாம் தற்பொழுது பார்க்க இருக்கிறோம் காதல் கோட்டை இந்த திரைப்படம் இவருக்கு வெற்றிகரமாக அமைந்தது மேலும் இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்த ஆசை,வாலி,அமர்க்களம்,தீனா, சிட்டிசன்,முகவரி,வரலாறு,பில்லா,மங்காத்தா போன்ற இந்த பத்து திரைப்படங்களும் இவரது சினிமா வாழ்க்கையில் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களாக தற்பொழுது வரை திகழ்ந்து வருகிறது.

மேலும் மங்காத்தா திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் 5வது திரைப்படமாக அமைந்தது இந்த மங்காத்தா திரைப்படத்தில் நடிகர் அஜித் பைக் ஓட்டும் வீடியோவை ரசிகர்கள் அதிகமாக இணையத்தில் ஷேர் செய்து வருவார்கள் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் வரும் பின்னணி இசை கூட ரசிகர்களுக்கு பிடித்ததாக திகழ்ந்து வருகிறது.

ajith
ajith

Leave a Comment