வி.ஜே. சித்ராவை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா.? அவர் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட பிரபலம்…

vj-chithra
vj-chithra

சின்னத்திரையில் ரசிகர்களை விட்டு பிரிந்த பிரபலங்களில் ஒருவர்தான் வி.ஜே. சித்ரா இவர் கடைசியாக நடித்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சின்னத் திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இடம் பிடித்தார். அது மட்டுமல்லாமல் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

நல்லா இருந்த நேரத்தில் எதற்காக அவர் இப்படி செய்தார் என்று தெரியவில்லை மேலும் அவரைப் பற்றி ஒரு இயக்குனர் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது சின்னத்திரை நடிகை வி.ஜே. சித்ரா பிறந்தநாள் நேற்று அவருக்காக வாழ்த்துக்களை ரசிகர்களும் மற்றும் சினிமா பிரபலங்களும் அவர் இல்லை என்றாலும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

அந்த வகையில் பார்த்தால் பல பிரபலங்களும் அதுபோல செய்ததை நாம் சமூக வலைதள பக்கங்களில் பார்த்திருக்கலாம்.மேலும் வி.ஜே. சித்ரா உயிரோடு இருந்த பொழுது அவரது பிறந்தநாளுக்காக ரசிகர்கள் அவருக்கு நிறைய கிப்ட் போன்றவற்றை அனுப்பி வைப்பார்கள். ஆனால் அவர் இப்பொழுது இல்லை என்று தான் இவரது ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் இருக்கிறார்கள்.

மேலும் நேற்று நடிகை சித்ராவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் சிவா சேகர் அவருக்காக பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா என்ற பதிவை வெளியிட்டு இருந்தாராம் ஏற்கனவே கடந்த வருடமும் சிவா சேகர் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vj chithra
vj chithra

இதனை தொடர்ந்து பார்த்தால் அவர் மட்டும் இப்பொழுது உயிரோடு இருந்தால் பல திரைப்படங்களில் நடித்து எங்கேயோ சென்று இருப்பார் அவர் இல்லாமல் நாங்களும் அவரது பிறந்த நாள் வந்தால் மிகவும் ஆழ்ந்த வருத்தத்தில் அவரை நினைத்து வருந்துகிறோம் என்றும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.