நடிகை ஹன்சிகாவின் வருங்கால கணவர் பற்றி வெளிவந்த புதிய தகவல்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் இவருடைய கொழுப்பு மொழுக்கான உடலமைப்பு ரசிகர்களின் வெகுவாக கவர்ந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் என்ற தகவல் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் ஹன்சிகாவின் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. மேலும் திடீரென இவ்வாறு தகவல் வெளியான? நிலைகள் ஹன்சிகாவிற்கு திருமணமா மாப்பிள்ளை யார்? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் நடிகை ஹன்சிகா தான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தினை வைத்து வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறாராம் அவ்வாறு பிசினஸில் பார்ட்னராக இருப்பவர் தான் சொஹைல் கதூரியா. இவ்வாறு பிசினஸில் பார்ட்னராக ஹன்சிகா இவருடன் இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு லைவ் பார்ட்னராக ஏற்றுக் கொள்ளலாம் என ஹன்சிகா முடிவு செய்து இருக்கிறார்.

நடிகை ஹன்சிகா மற்றும் சொஹைல் இவர்களுடைய திருமணம் வருகின்ற டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது மேலும் இவர்களுடைய திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்வாறு இது குறித்து ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ஹன்சிகா தரப்பிலிருந்து இதுவரையிலும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சொஹைலை தெரியுமா பிசினஸ் பார்ட்னராக இருந்து வந்த இவர்கள் நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய திருமண நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 2ம் தேதி துவங்கி 4ம் தேதி அளவில் முடிய எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹன்சிகாவின் நடிப்பில் கடைசியாக மகா திரைப்படம் வெளியானது இந்த படம் இவருடைய 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய பழைய காதலர் சிம்புவுடன் இணைந்து நடித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment