கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. சூப்பர் ஹிட் திரைப்படத்தை அசால்டாக நழுவ விட்ட விஜய்.? இடையில் வந்த நடிகருக்கு கிடைத்த வர பிரசாதம்..

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து இருந்ததை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தற்போது லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் பணியாற்றி வருவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருப்பார்.

அதனை தொடர்ந்து இந்த லியோ திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த திரைப்படத்தை முடித்த கையோடு விஜய் தனது அடுத்த திரைப்படத்திலும் நடிக்க கதை தேர்ந்தெடுத்து விட்டார் எனவும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் அதே அளவிற்கு நிறைய ஹிட் திரைப்படங்களையும் தவறவிட்டு உள்ளார் அவ்வாறு இவர் தவறவிட்ட ஒரு திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது ஆம் நடிகர் விஜய் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தை தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி அவர்கள் இயக்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விஜய் தான் நடிக்க வேண்டுமாம். ஆனால் அப்பொழுது ஒரு சில காரணங்கள் குறித்து அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிக நாட்கள் ஓடி சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

karthik
karthik

Leave a Comment