மீண்டும் பிரபல இயக்குனருடன் கைகோர்த்த விஜய் சேதுபதி.! பூஜையுடன் மலேசியாவில் தொடங்கிய படப்பிடிப்பு..

0
Vijay Sethupathi
Vijay Sethupathi

வெள்ளித்திரையில் மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும். மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் இவர் நடிக்கும் பொழுது எந்த கதாபாத்திரம் தந்தாலும் அதற்கு ஏற்றது போல் கனகச்சிதமாக நடிக்கும் திறமை உடையவர்.

அதேபோல் இவரது நடிப்பில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் இவர் வில்லனாக நடிக்கும் படங்கள் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. அதாவது இயக்குனர் ஆறுமுக குமார் கூட்டணியில் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.

ஏற்கனவே இதே கூட்டணி ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் பணியாற்றிய நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் மலேசியாவில் நடந்து முடிந்துள்ளதாம்.

Vijay Sethupathi
Vijay Sethupathi

மேலும் இந்த திரைப்படத்தில் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறாராம். மேலும் இவர் ஏற்கனவே கன்னடத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் தான் இவருக்கு தமிழில் முதல் திரைப்படமாகவும் அமைகிறது.

Vijay Sethupathi
Vijay Sethupathi

இந்நிலையில் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதால் பல ரசிகர்களும் இந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக எந்த திரைப்படத்தில் யாருடன் நடிக்குவார் என்பது பற்றி தெரிந்தால் அப்டேட் கொடுங்கள் என்றும் கேட்டு வருகிறார்கள்.

Vijay Sethupathi
Vijay Sethupathi