முதல் நாள் வசூலில் மாஸ் காட்டியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்.? அட என்னப்பா நம்பவே முடியல..

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து நடிகர்,இயக்குனர்,பாடகர்,தயாரிப்பாளர் போன்ற பல திறமைகளை கொண்டு தற்பொழுது வலம் வரும் பிரபலம் தான் விஜய் ஆண்டனி. இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அதனை தொடர்ந்து பார்த்தால் இவர் நடிகராக ஒரு சில திரைப்படங்களில் நடிக்க அவ்வாறு இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாகிவிட்டது.மேலும் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்தது.

இதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு நடிகர் விஜய் ஆண்டனி எப்படியோ ஒரு வழியாக முயற்சித்து பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் இந்த இரண்டாம் பாகம் வெற்றிகரமாக வெளியாகிவிட்டது.

இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் பொழுது கூட நடிகர் விஜய் ஆண்டனி அவர்களுக்கு பயங்கர விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகின இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க நேற்று வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் பார்த்தால் இந்த இரண்டாம் பாகத்தின் கதையும் முதல் பாகத்தை விட அதிக அளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகவும் இருந்து வருகிறதாம். இந்நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்த்தால்.

இந்த திரைப்படம் தமிழில் ரூ.3 கோடியே 80 லட்சம் ,தெலுங்கில் ரூ.8.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இன்னும் ஒருசில நாட்களில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

vijay antony
vijay antony

Leave a Comment