சத்தமே இல்லாமல் நடிகர் ரஜினியை வைத்து வேலை பார்க்கும் லோகேஷ் கனகராஜ்.? அட போட்டோ ஷூட் வரை போயாச்சா..

சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்த்தால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 171  கூடிய சீக்கிரம் நடிக்கப் போகிறார் எனவும் தகவல் வெளிவந்தது.

மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போவதாகவும் கூறப்பட்டது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இவர் நடிகர் விஜய் அவர்களை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் முடிந்தவுடன் பல திரைப்படங்களில் பணியாற்ற இருக்கிறார் என தகவல் வெளியானது. அதேபோல் நடிகர் ரஜினியுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 திரைப்படத்தில் கைகோர்க்க இருக்கிறார் என தகவல் வெளியான நிலையில். தற்பொழுது இந்த படத்தின் முதல் போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாம்.

அதிலும் குறிப்பாக சன் டிவி அலுவலகத்தில் தான் இந்த போட்டோ ஷூட் நடந்துள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அறிவிப்புடன் வெளிவந்தால் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் இருப்போம் என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பலரும் இது உண்மைதான் கூடிய சீக்கிரம் ரஜினி 171 படத்தின் அப்டேட் வெளிவரும் என்றும் கூறி வருவது மட்டுமல்லாமல் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கை கோர்த்தால் மிகவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் அளவிற்கு படம் வெளியாகி விடும் என்றும் தங்களது கருத்துகளை ஒரு சில ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

rajini
rajini

Leave a Comment