நேரில் வந்து நடிகர் மனோபாலாவிற்கு அஞ்சலி செலுத்திய விஜய்.! வைரலாகும் வீடியோ.!

0
manobala
manobala

இன்று திரை உலகமே வருந்தி கொண்டிருக்கும் ஒரு நாள் என்றே கூறலாம் இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர் என பன்முக திறமை கொண்டு தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வலம் வந்த நடிகர் மனோபாலா உடல் நல குறைவால் மறைந்துவிட்டார். மேலும் இவரது இழப்பு ரசிகர்கள்,சினிமா பிரபலங்கள் போன்ற பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது.

நடிகர் மனோபாலா தனது ஆரம்ப காலகட்ட சினிமா பயணத்தில் நடிகர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தார் அதற்குப் பின்பு துணை இயக்குனராக மாறி எப்படியோ ஒரு வழியாக தமிழ் சினிமாவில் இயக்குனராக பல திரைப்படங்களை எடுத்தார். அதேபோல பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

மேலும் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் அதிகமாக இயக்குவதில்லை என்றாலும் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வந்தார்.மேலும் இவர் இறந்தது குறித்து பல சினிமா பிரபலங்களும் தங்களது வருத்தத்தை சமூக வலைதளங்கள் மூலமும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜய் நடிகர் மனோபாலாவின் உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் விஜய் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் நடிகர் மனோ பாலாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தொடர்ந்து பார்த்தால் நடிகர் மனோபாலா நடித்த பல திரைப்படங்களில் அவர் நடித்த காட்சிகளை கட் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் அவருடன் இருந்த வீடியோக்கள்,புகைப்படங்கள் போன்றவற்றை ஷேர் செய்து தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.