200 சிகரெட்களை ஒரு நாளைக்கு பிடித்த மனோபாலா.? பின்பு தூக்கிப் போட்டது எந்த காரணத்தினால் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கி விட்டு பல திரைப்படங்களில் நடித்துவிட்டு நேற்று பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை விட்டு பிரிந்த நடிகர் தான் மனோபாலா இவர் உடல்நல குறைவால் காலமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் இவரைப் பற்றி புதிய புதிய தகவல்கள் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதேபோல் நடிகர் மனோபாலாவிடம் இருந்த ஒரு கெட்ட பழக்கத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.அதாவது நடிகர் மனோபாலா இயக்குனராக வளம் வந்த பொழுது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 சிகரெட்டுகள் குடிப்பேன் என்றும் பின்னர் அதிலிருந்து எப்படி வெளிவந்தேன் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளாராம்.

அதில் பேசிய மனோபாலா நான் இயக்குனராக வளம் வந்த பொழுது எனக்கு பயங்கரமாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது அதிக அளவில் ஒரு நாளைக்கு அதிகமான சிகரெட் துண்டுகளை பிடித்து தள்ளுவேன்.இதுக்காகவே என்னை சிம்னி என்றுதான் அழைப்பார்கள் சிகரெட் சாம்பலை தட்டுவதற்காக இந்தி நடிகை ரேகா இரண்டு பான்பராக் பாக்கெட்களை கட்டி என் கழுத்தில் தொங்க விட்டார்.

அப்படி என்றால் அந்த அளவிற்கு நான் ஒரு சிகரெட் பிரியனாக இருந்தேன் எனவும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 200 சிகரெட்கள் பிடிப்பேன்.அதனால் தான் எனது எலும்புகள் அனைத்தும் பலவீனமானது என்றும் இனி ஒரு சிகரெட் பிடித்தாலும் நான் இறந்து விடுவேன் என மருத்துவர்கள் கூறிய பொழுதுதான் நான் சிகரெட் பழக்கத்தை கைவிட்டேன் என அந்த பேட்டியில் நடிகர் மனோபாலா கூறியதாக இந்த தகவல் வைரலாகி வருகிறது.

மேலும் அதில் பேசிய நடிகர் மனோபாலா சிகரெட் பழக்கத்தை விட்ட பின்பு நான் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும் பொழுது வில்லனுக்கு தகவல் கொடுக்க ஏறி இறங்கி ஓட வேண்டும் அப்பொழுது அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார்கள். அது 10,11 டேக்குகளுக்கு போனால் வசனம் பேசுவதற்கு நான் மூச்சு விட வேண்டும் அப்படி செய்யாமல் இயக்குனர் இன்னும் ஒன்று என்று சொல்வார்.

அந்த மூச்சை எடுக்காவிட்டால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்பது இயக்குனருக்கு தெரியாது.அப்பொழுதுதான் நான் சிகரெட் பிடித்தால் எவ்வளவு கெட்டது நடக்கும் என்பதை உணர்ந்தேன். அதிலிருந்து சிகரெட் பிடிப்பவர்களிடமும் மெதுவாக புகை பிடிக்காதீர்கள் எனவும் கூறிவந்தேன் என நடிகர் மனோபாலா அந்த பேட்டியில் கூறியதாக தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

manobala
manobala

Leave a Comment