அட கடவுளே கடைசி நேரத்தில் மகன் முகத்தை கூட பார்க்க முடியாமலே போன மனோபாலா.!

கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் நேற்று மரணமடைந்தவர் தான் நடிகர் மனோபாலா இவர் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களை இயக்கியும்,தயாரித்தும் வளம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் காமெடி கலந்த கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து வந்தார் அவ்வாறு பார்த்தால் இவர் நடித்த காமெடி கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவுக்கும் பேசப்பட்டு வருகிறது.

இவரது இழப்பு தாங்க முடியாமல் தற்போழுது வரை பல பிரபலங்களும் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதள பக்கங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் இவர் நடித்த திரைப்படத்தில் இருந்து சிறிய சிறிய வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு அவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் மனோபாலா உயிரிழந்த செய்தியை கேட்ட பல பிரபலங்களாலும் என்ன சொல்வது என்று தெரியாமல் அவரது வீட்டிற்கு வந்து மரியாதை செலுத்தி விட்டு சென்றார்கள். அந்த வகையில் பார்த்தால் தனது மகன் முகத்தைக் கூட பார்க்க முடியாமலே மனோபாலா உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் மனோபாலா தனது மனைவி உஷா மகாதேவன் உடன் சென்னையில் வசித்து வந்துள்ளார் இவர்களுக்கு ஒரே மகன் மட்டுமே இருந்துள்ளார். அவரும் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வசித்து வந்துள்ளாராம். நேற்று நடிகர் மனோபாலா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலைமையில் செய்தியைக் கேட்ட இவரது மகன்.

வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு வருவதற்குள்ளே நடிகர் மனோ பாலா உயிரிழந்ததாக இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் பெற்ற மகனுக்கு இப்படி ஒரு நிலைமை என்றைக்குமே வரக்கூடாது என்று  தங்களது கருத்துகளையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

manobala
manobala

Leave a Comment