அர்த்த ராத்திரியில் கதவைத் தட்டிய சினிமா வாய்ப்பு.! கற்பூரம் ஏற்றி கண்கலங்கி வரவேற்ற கவுண்டமணி.?

தமிழ் திரையுலகில் பல காமெடி நடிகர்கள் தற்பொழுது உருவாகிக்கொண்டே வருகிறார்கள். ஆனால் காமெடிக்கு பெயர் போன நடிகர்களில் முக்கியமானவர்கள் தான் செந்தில் மட்டும் கவுண்டமணி அதிலும் குறிப்பாக கவுண்டமணி நடிக்காதே திரைப்படங்களே இல்லையென்ற அளவிற்கு இவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதிலும் குறிப்பாக சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நடிகர் கவுண்டமணி நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரம் கிடைக்க அவ்வாறு சினிமா மற்றும் நாடகங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார் எப்படியாவது சினிமாவில் பெரிய பட வாய்ப்பு வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் 16 வயதினிலே படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது இந்தத் திரைப்படத்தில் இவர் பத்த வச்சிட்டியே பரட்ட என வசனம் பேசும்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் அவரை சிபாரிசு செய்தவர் இந்த திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக வேலை செய்த பாக்கியராஜ் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணி அவர்களை நடிக்க வைத்ததாம்.அதனைத் தொடர்ந்து பாரதிராஜா அவர்கள் கிழக்கே போகும் ரயில் படத்தை இயக்கினார் அந்த திரைப்படத்தில் தான் நடிகை ராதிகாவும் அறிமுகமானார்.

இந்த படத்தில் ராதிகா மீது ஆசைப்படும் அவரின் அக்கா கணவராக யாரை நடிக்க வைக்கலாம் என பாரதிராஜா யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது பாக்கியராஜ் அவர்கள் மீண்டும் கவுண்டமணிக்கு சிபாரிசு செய்துள்ளாராம். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் தொடர்ச்சியாக தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடத்திவிட்டார்.

raadhika

ஆனால் நள்ளிரவில் கவுண்டமணி வீட்டின் கதவை தட்டி அவரை எழுப்பி அங்கிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்று பாக்யராஜ் அவர்கள் கவுண்டமணியை பார்த்து கற்பூரத்தை ஏற்று என்றாராம். நல்ல வாய்ப்பு கிடைச்சிடுச்சா என கவுண்டமணி ஏக்கமாக பார்க்க இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் அது எல்லாம் நல்ல கதாபாத்திரம் கிடைச்சிடுச்சி என்று கூறியதும் நடிகர் கவுண்டமணி கற்பூரத்தை கண்கலங்கியப்படியே ஏற்றினாராம்.மேலும் இந்த தகவலை நடிகர் பாக்கியராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாக தற்பொழுது வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version