விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் நடிகைகள்.? வெளியான மாஸ் அப்டேட்..

தமிழ் திரை உலகில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து அதன் பிறகு ஒரு சில ஹிட் திரைப்படங்களை கொடுத்து கொண்டு தற்பொழுது தொடர்ச்சியாக ஹிட் திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அஜித் இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து ஒவ்வொரு விஷயத்தையும் நன்றாக கற்றுக்கொண்டு தற்பொழுது தமிழ் சினிமாவில் கெத்தாக வலம் வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் நல்ல கருத்துக்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனை தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் நடிகர் அஜித் விரைவில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிறது.

முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த இந்த திரைப்படத்தில் ஒரு சில காரணங்கள் குறித்து பின்பு மகிழ் திருமேனி அவர்கள் இந்த திரைப்படத்தை இறுதியாக இயக்க இருக்கிறாராம்.மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தற்பொழுது அஜித் தனது உலக பயணத்தில் எங்கு இருக்கிறார் என்பதை ரசிகர்களும் புகைப்படங்கள் மூலம் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது.மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் யோசித்துக் கொண்டே இருக்கிறாராம்.

இதற்காக  ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா,கத்ரீனா கைஃப்,கரீனா கபூர்,கங்கனா ரனாவத் போன்ற நடிகைகளை விடாமுயற்சி திரைப்படத்தில் இவர்களில் யாரையாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் யோசித்து வருவதாக இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

thrsha
thrsha

Leave a Comment