விடாமுயற்சி திரைப்படத்திற்காக புதிய லுக்கில் அஜித்.? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

0
ajith
ajith

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித் இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் விரும்பி பார்ப்பது மட்டுமல்லாமல் இவரது திரைப்படங்கள் அதிகம் வசூல் செய்துவிடும். அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் ஆனது அடுத்த திரைப்படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களுடன் இணைந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.நடிகர் அஜித் அவர்கள் அடுத்ததாக நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தார்.

ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து தற்பொழுது இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி அவர்கள் இயக்க இருக்கிறார் என தகவல் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் பல ரசிகர்களும் இந்தத் திரைப்படம் எந்த மாதிரி கதைகளம் கொண்டு அமையும் என்றும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்கிவிட இருப்பதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் தற்போது நடிகர் அஜித் அவர்களை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அஜித் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் தனது தாடியை எடுத்துவிட்டாராம்.

இதனால் பல ரசிகர்களும் நடிகர் அஜித் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என தற்பொழுதே கேள்வி எழுப்பி வருகிறார்கள்.மேலும் ஒரு சில ரசிகர்கள் நடிகர் அஜித் இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தால் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

ajith
ajith