கேப்டன் மிலர் திரைப்படம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு.! உச்சகட்ட உர்ச்சாகத்தில் ரசிகர்கள்…

0
captain-miller
captain-miller

கடந்த ஆண்டு செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் அருண் மாதேஸ்வரன். அதன் பிறகு தற்போது நடிகர் தனுசை வைத்து கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக காத்திருக்கிறது.

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழை தாண்டி ஹாலிவுட்டிலும் தனது திறமையான நடிப்பை வெளி காட்டி வருகிறார் இதனை தொடர்ந்து சினிமாவில் உச்சத்தை நோக்கி வளர்ந்து கொண்டு வரும் நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் லாபம் பார்த்தது ஆனால் நானே வருவேன் திரைப்படம் கடுமையான விமர்சனத்தை பெற்று முதலீடு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் திணறியது இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் அவர்கள் வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாக இருந்த வாத்தி திரைப்படம் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக பிப்ரவரி மாதம் ஒத்தி வைக்கப்பட்டது ஆனால் மறுபடியும் வாத்தி பாடத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி ஏப்ரல் மாதத்தில் வைத்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது என்று பல தகவல்கள் வெளியானாலும் இந்த படத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு ஒரு அப்டேட் வெளியாகும் என்று தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர் இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை நிலவி வருகிறது.