சுல்தான் படத்தின் லிங்கை தயாரிப்பாளருக்கே டுவிட் செய்த இணையவாசிகள்.! படக்குழு எடுத்த அதிரடி முடிவு

தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வந்தால் உடனே அது திருட்டு இணையதளங்களில் வெளியாகி விடுகிறது அது இன்று நேற்று இல்லாமல் காலம் காலமாக நடந்து வரும் ஒரு செயலும் எனவும் கூறலாம்.டெலிகிராம் போன்ற சமூகவளைதளங்களில் இந்த திருட்டு லிங்குகள் இருக்கிறது.

அந்த வகையில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் திருட்டு லிங்கை அந்த சுல்தான் படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் ட்விட்டர் கமெண்டில் ஒருவர் பதிவிட்டுள்ளாராம் அதுமட்டுமல்லாமல் சுல்தான் திரைப்படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது எனவும் பதிவிட்டுள்ளாராம்.

மேலும் ஆத்திரமடைந்த எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தின் கமாண்டிலேயே இந்த பதிவு இருந்ததால் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார் அதனால் அடே அது என் படம் எனக்கே பைரசி ப்ரமோட் பண்ணுகிறாயா என அந்த நபரை திட்டி விட்டாராம்.

இதைவைத்து பார்த்த ரசிகர்கள் பலரும் திருட்டு லிங்கை திருடும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள் என்னவாகும் இப்படியே போய் கொண்டால் என கூறி வருகிறார்கள்.

karthik

மேலும் இந்த தகவல் தற்போது கார்த்தி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version