மொத்த பட்ஜெடில் 90 சதவீதத்தை இப்பொழுதே வசூல் செய்த இந்தியன் 2.! ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடியா?

Indian 2: சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 1996ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருந்த திரைப்படம் தான் இந்தியன். இந்த படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற நிலையில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது.

அந்த படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடிக்க ரெட் ஜெயன்ட் நிறுவனம், லைக்கா நிறுவனம் இணைந்து மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி போன்ற நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வரும் நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்தியன் 2 படத்திற்காக சுமார் 4 மணி நேரம் மேக்கப் போட்டு மிகவும் ரிஸ்க் எடுத்து கமலஹாசன் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தற்போது இந்த படத்தின் பிசினஸை தொடங்கி இருக்கும் நிலையில் முதற்கட்டமாக இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. அப்படி சுமார் ரூ.220 கோடிக்கு  நிறுவனம் இந்தியன் 2 படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கிறதாம்.

இந்தியன் 2 படம் மொத்தமாக ரூபாய் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் நிலையில் இதனுடைய ஓடிடி உரிமை விற்பனை செய்ததில் 90 சதவீத முதலீடு வந்திருப்பது பட குழுவினர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு இந்தியன் 2 படம் வெற்றி பெற்றால் இதன் மூன்றாவது பாகமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment