நேர்கொண்ட பார்வை தீம் மியூசிக் செய்த சாதனை.! கொண்டாடும் ரசிகர்கள்.

0

தல அஜித் நடிப்பில் வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை, இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு இந்த திரைப்படத்தின் தீம் மியூசிக் ஆன தீமுகம் பாடல் வெளியானது.

நேர்கொண்ட பார்வை படத்தை முன்னாள் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்துள்ளார், இந்த திரைப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார், இவர் வாதாடும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு இருக்கும் என சமீபத்தில் தகவல் வெளியானது.

மேலும் இந்த திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் தான் இயக்கியுள்ளார், நேற்று மாலை வெளியாகிய தீம் மியூசிக் யூடியூபில் பல சாதனைகளைப் படைத்துள்ளது, தற்பொழுது வரை இந்த தீம் மியூசிக் 5 லட்சத்து 86 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது, அதுமட்டுமில்லாமல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் லைக்ஸ் களை பெற்றுள்ளது, இதனை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.