நேர்கொண்டபார்வை தமிழகத்தில் மொத்த வசூல் விவரம்.! அஜித் படைத்த மாபெரும் சாதனை

0
ajith
ajith

அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவருக்கு இந்த வருடம் முக்கிய படமாக அமைந்துள்ளது ஏனென்றால் இந்த வருடத்தின் முதல் படமே விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றியடைந்தது, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்டபார்வை சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது, விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் மாஸ் திரைப்படத்தின் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான பிங்க் திரைப்படத்தி நடித்தார்.

இந்த திரைப்படத்தில் 10 நிமிட காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்காக அஜித் நடித்திருப்பார் மற்றபடி பல காட்சிகளில் அஜித் 10 பேர்களில் ஒருவராக நடித்திருப்பார், இந்த நிலையில் இந்த திரைப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் பெற்றுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் தமிழகம் முழுவதும் இதுவரை 73 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளன இவை மாபெரும் சாதனை எனக் கூறுகிறார்கள், ஏனென்றால் ஒரு முன்னணி நடிகரின் மாஸ் திரைப்படத்திற்கு வரும் வசூல்தான் இது, இப்படி ஒரு கதையில் நடித்து இத்தனை கோடி வசூல் செய்தது பெரிய விஷயம் என பலர் தெரிவித்துள்ளார்கள்.