நேர்கொண்ட பார்வை ரிலீஸுக்கு முன்பே ஒரு ஸ்பெஷல் காட்சி எங்கு தெரியுமா.?

0

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தான் தயாரித்துள்ளார், இன்னும் சில வாரங்களில் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலிருந்து ஏற்கனவே ட்ரெய்லர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது அதுமட்டுமில்லாமல் இந்த டிரைலரை பார்த்து பல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கொண்டாடினார்கள், மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு முன்பு மும்பையில் ஒரு பிரீமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்ய இருக்கிறார் போனி கபூர், அந்த ஷோவில் அவரின் குடும்பத்தார் கலந்து கொள்வார் என தெரிகிறது.