நேர்கொண்ட பார்வை கொண்டாட்டத்தை ஆரம்பித்த பிரபல திரையரங்கம்.! இதோ புகைப்படம்

0

அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் தீரன் அதிகாரம் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது, அது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று திரைப் படத்தின் ப்ரமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, பல திரையரங்கங்களில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பேனர் வைத்து கொண்டாடி வருகிறார்கள்  அதுமட்டுமில்லாமல் பேருந்துகளில் போஸ்டர் வைப்பது கட்டவுட் என அமர்க்களப் படுத்தி வருகிறார்கள்.