அப்டேட்டுக்கே மாஸ் போஸ்டரை வெளியிட்ட நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர்.! வைரலாகும் போஸ்டர்

0

Nerkonda paarvai : தல அஜித் விசுவாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் ஸ்கெட்ச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் update வெளியானால் அஜித் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

சமீபத்தில் வெளியான ட்ரைலர் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று வைரலானது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது, அஜித் இந்த திரைப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார் இவர் வாதாடும் ஒவ்வொரு காட்சியும் விசில் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட் 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நேர்கொண்ட பார்வை போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளார், இதை அஜித் ரசிகர்கள் அனைவரும் ட்ரெண்ட் செய்து ஷேர் செய்து வருகிறார்கள்.