நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டின் திரையரங்க உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விலைப்போனதா.! இதோ மாஸ் தகவல்

0

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கின்படி அஜித் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு வக்கீலாக நடித்துள்ளார் இவர் வாதாடும் காட்சிகள் மிகவும் பரபரப்பாகவும் அனைவரையும் கவரும் விதமாகவும் இருக்கும் என கூறியுள்ளார்கள்.

இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும், படத்தின் வியாபாரங்கள் அனைத்தும் படு வேகமாக விற்று வருகிறது இந்த நிலையில் தமிழ்நாட்டில் எத்தனை கோடிக்கு விலைபோனது என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 45 கோடிக்கு திரையரங்க உரிமை விற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன, மேலும் அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரை பிரபலங்களும் படத்தை காண எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.