நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சிவா கூறிய கருத்து.!

0

இயக்குனர் சிவா அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் என்று சொல்லலாம் ஏனென்றால் இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை நான்கு திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றி விட்டார்கள், இதில் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார்கள். இவர்கள் இருவரும் ஐந்தாவது முறையாக எந்த திரைபடத்திளாவது இணைவார்களா என்று கேட்டால் இந்த கேள்விக்கு அவர்களிடம் மட்டும் தான் பதில் கிடைக்கும்.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை, இந்த திரைப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகியுள்ள கதையாகும், திரையில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து பல திரைப்பட பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறினார்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தை பார்ப்பதற்கு இயக்குனர் சிவா முதல் நாளே வந்திருந்தார், இந்த திரைப்படத்தில் நடித்த அர்ஜுன் சிதம்பரம் அவர்களை நேரில் சந்தித்து நன்றாக நடித்து உள்ளீர்கள் என பாராட்டியுள்ளார். இதனை அர்ஜுனே ஒரு  பேட்டியில் இவ்வளவு பெரிய இயக்குனர் என்னை பாராட்டியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என சமீபத்தில் கூறினார்.