சென்னையில் முக்கிய படத்தின் வசூலை முந்திய நேர்கொண்டபார்வை.!

0

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த திரைப்படம், தற்போது இந்த படத்தின் சென்னை வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது, சென்னை பாக்ஸ் ஆபிஸில் விஜயின் தெறி வசூலை இந்த திரைப்படம் முந்தியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 10.76 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக அமைந்தது, ஒரு கோர்ட் ரூம் ட்ராமா திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்தது பலருக்கு ஆச்சரியம் தான்.