நேர்கொண்ட பார்வை படத்தை போல் நல்ல படத்தை நான் இன்னும் எடுக்கவில்லை.! பிரபல இயக்குனர் அதிரடி.!

0
nerkondapaarvai
nerkondapaarvai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித், இவரை அல்டிமேட் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள், சமீபத்தில் இவர் நடித்த நேர்கொண்டபார்வை திரைப்படம் அனைத்து மக்களையும் கவர்ந்து வெற்றி பெற்றது.

தமிழ்சினிமாவில் எப்போதாவதுதான் எல்லோரையும் கவரும் அளவிற்கு திரைப்படம் வெளியாகும், அந்த வகையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து நேர்கொண்டபார்வை திரைப்படம் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைப் பற்றி பிச்சைக்காரன் இயக்குனர் சசி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சசி இயக்கத்தில் தற்போது சிவப்பு பச்சை மஞ்சள் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது, இந்த படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர், இன்னும் பரியேறும் பெருமாள் மற்றும் நேர்கொண்டபார்வை திரைப்படத்தைப் போல் நல்ல திரைப்படங்களை நான் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.