அடிச்சு தூக்கிய நேர்கொண்டபார்வை.! அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்.! மொத்த வசூல் விவரம் இதோ.

0
nerkonda paarvai
nerkonda paarvai

தமிழ் சினிமாவில் கிங் மேக்கர் என அழைக்கப்படுபவர் தல அஜித், இவரின் படத்திற்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் எதிர்பார்ப்பு இருக்கும். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் தல அஜித் சமீபகாலமாக நடித்து வரும் படங்கள் அனைத்தும் பெண்களுக்கான சமூக நலன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் அப்பா மகள் பாச உறவை வைத்து வெளியாகியது இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்தது, குறிப்பாக தாய்மார்கள் அனைவரையும் கவர்ந்தது. சமீபத்தில் நடித்த நேர்கொண்டபார்வை திரைப்படமும் பெண்கள் சமூக நலனை மையமாக வைத்து நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அஜித்தின் மாஸ் காட்சிகள் எதுவும் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டிருந்தது, மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு கெஸ்ட் ரோல் போலதான் நடித்திருந்தார், இதுவரை வந்த திரைப்படங்களையும் இந்த திரைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தால் எந்த ஒரு சம்பந்தமும் இருக்காது அந்த அளவு முழுக்க முழுக்க வேறொரு கதையம்சம் கொண்டது.

உண்மையிலேயே சொல்லப்போனால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் எதுவுமே நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் இடம்பெறவில்லை ஆனால் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி உள்ளது. சென்னையில் மட்டும் 32 நாட்கள் முடிவில் 10.79 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. படத்திற்கு படம் அஜித் வசூலில் கிங் என நிரூபித்து வருகிறார்.

இந்த வருடத்திலேயே விசுவாசம் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.