போஸ்டருடன் வெளியானது நேர்கொண்ட பார்வை சென்சார் தகவல்.! போடு தகிட தகிட

0

தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார், சமீபத்தில்  இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் தான் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 8 என போஸ்டருடன் அறிவித்தார், இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் அதற்குள் அடுத்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு கொண்டாடுவதற்கு வெளியிட்டுள்ளார்கள்.

ஆம் அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது படத்தை பார்த்த சென்சார் குழுவினர் நேர்கொண்ட பார்வை படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். இதனை போனிகபூர் போஸ்டருடன் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்,