நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தனது பாணியில் தாறுமாறாக புகழ்ந்த பார்த்திபன் இதோ ட்வீட் 

0

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று வினோத் தான் இயக்கி உள்ளார் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இன்று அதிகாலையிலேயே சில திரையரங்கில் அஜித் ரசிகர்கள் அமர்க்களமாக பால் அபிஷேகம்,பேனர்கள், கட் அவுட் வைத்து அசத்தி விட்டார்கள், இந்த நிலையில் படத்தை பார்த்த பல பிரபலங்களும் தங்களது கருத்தை கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது “நேரு கொண்ட பார்வை காங்கிரஸ் கொண்ட பார்வை Bjp கொண்ட பார்வை காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை-பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக ‘நேர் கொண்ட பார்வை’ மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக!ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.