பிகில் படலை கொண்டாடி முடிவதற்குள் நேர்கொண்ட பார்வை அப்டேட்டை வெளியிட்ட போனிகபூர்.! இதோ மாஸ் தகவல்

0

அஜித் வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், இந்த நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் தீம் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் இருந்து நேற்று சிங்க பெண்ணே பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள், இதனால் அஜீத் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.

அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலிருந்து அகலாதே பாடலை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் அறிவித்துள்ளார், இந்தப்பாடல் வெளிவருவதற்கு முன்பே அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.