செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைவிமர்சனம்.!

செல்வராகவன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை.

இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது. அதாவது என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்திற்காக எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் 2 கோடி ரூபாய் 42 லட்சம் கடன் வாங்கியதாள் படத்தை வெளியிடுவதற்கு முன்னாள் ஒரு கோடியே75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டனர் மீதமுள்ள ஒரு கோடியே 24 லட்சம் தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பிறகு பல்வேறு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று பின்பு படத்தை ரிலீஸ் செய்யவும் படத்தின் மீதான தடையை நீக்கவும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் படத்திற்கு செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை

கிறிஸ்துவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார் ரெஜினா, கடவுள் பற்றி முத்தி போய் இருக்கும் ரெஜினா  தான் சம்பாதிக்கும் முழு பணத்தையும் அந்த ஆசிரமத்திற்கு செலவு செய்து வருகிறார். அதேபோல் எஸ் ஜே சூர்யா பணக்கார பெண்ணான நந்திதாவை திருமணம் செய்து கொள்கிறார். இந்த தம்பதிகளுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இங்குதான் கதையின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளார் செல்வராகவன் அதாவது அந்த குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக கேர் டேக்கராக மரியமை ரெஜினாவை அணுகுகிறார்கள். தங்களுடைய குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக பெரிய அளவில் பணம் தருவதாக கூறுவதால் உடனே ரெஜினா ஒப்புக்கொள்கிறார். எஸ் ஜே சூர்யா சபல குணம் படைத்தவர் அதனால் ரெஜினா மீது ஆசை வந்துவிடுகிறது.

nenjam-marapathillai
nenjam-marapathillai

எப்படியாவது ரெஜினாவை அடைந்துவிட வேண்டும் என அவரிடம் சில்மிஷம் செய்ய முயற்சிக்கிறார் அப்பொழுது ரெஜினா விலகிச் செல்கிறார். இதன் உச்சகட்டத்தில் எஸ் ஜே சூர்யா ஒரு காலகட்டத்தில் அதிக கோபமடைந்து ரெஜினாவை கொலை செய்து விடுகிறார். பின்பு தன்னை கொலை செய்த எஸ் ஜே சூர்யா அவர்களை பழி வாங்குவதற்காகவே ஆவியாக வருகிறார் ரெஜினா. பின்பு தன்னை கொலை செய்த எஸ் ஜே சூர்யா அவர்களை ஆவியாக வந்து ரெஜினா பழிவாங்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் எஸ் ஜே சூர்யா தன்னுடைய அசால்ட்டான நடிப்பை வழக்கம்போல் வெளிப்படுத்தி படத்திற்கு பலம்  சேர்த்துவிட்டார். அதே போல் நந்திதா நடிப்பை விட  ரெஜினா நடிப்பு மிரட்டும் படி அமைந்துள்ளது வித்தியாசமான திரைக்கதை படத்தின் கிளைமாக்ஸ் என அனைத்தும் ரசிக்கும்படி வித்தியாசமாக அமைந்துள்ளது.

ஆனால் காலங்காலமாக பேய் கதை எடுப்பது நல்லவனை கொன்று பின்பு அது பேயாக மாறி கெட்டவனே பழிவாங்கும் அதே பழைய கதை தான் படத்தின் முக்கிய பகுதியாக முதல் பாதி விறுவிறுப்பாகவும் சென்றது ஆனால் இரண்டாம் பாதி சுவாரஸ்யம் இல்லை. மொத்தத்தில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தைப் ஒருமுறை பார்க்கலாம்.

Leave a Comment