நெல்சன் பிறந்தநாள் ஸ்பெஷல் : ஜெயிலர் படத்திலிருந்து வெளியான “மேக்கிங் வீடியோ”

கடந்த சில வருடங்களாக புதுமுக இயக்குனர்கள் சிறந்த படங்களை கொடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் ஹச். வினோத், லோகேஷ் கனகராஜ் ஆகியோர்களை தொடர்ந்து நெல்சன் திலிப் குமாரும் கோலமாவு கோகிலா, டாக்டர், பிஸ்ட் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தற்பொழுது கூட சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ஜெயிலர் என்னும் படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்தில் ரஜினி உடன் இணைந்து கன்னடா டாப் நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு டாப் நடிகர் சுனில்,  மோகன்லால்,  பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், வசந்த் ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ரஜினியின் காட்சிகள் அனைத்தும் முடிந்து டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்து உள்ளார். மற்ற அனைவரும் இறுதி கட்ட ஷூட்டிங் கலந்து கொண்டுள்ளனர்.

அண்மையில் இந்த படத்தின் glimpse வீடியோ வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை வேற லெவல் எக்குறவிட்ட நிலையில் ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 19 ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது இதற்கிடையில் இன்று நெல்சன் திலிப் குமாரின் பிறந்தநாள் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஒரு காட்சியும் சிறப்பாக இருந்து உள்ளதால் நிச்சயம் ஜெயிலர் படம் நெல்சனுக்கு மிகப்பெரிய ஒரு ஹிட் படம் எனக் கூறி  கமெண்ட் அடித்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை  ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதோ ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோவை நீங்களே பாருங்கள்.