பொம்மை திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தினை பார்த்து இயக்குனர் நெல்சன் தற்போது தனது விமர்சனத்தை கூறியுள்ளார். அவர் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். அதாவது இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பொம்மை.
இந்த படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர், டிரைலர் போன்றவற்றை பார்க்கும் பொழுது எஸ்.ஜே சூர்யா சைக்கோ திரில்லர் கேரக்டரில் நடித்துள்ளார். அதாவது பொம்மைகளின் மீது அதிக உணர்ச்சியுடன் இருக்கும் எஸ்.ஜே சூர்யா அதனை யாராவது தொட்டால் மிகவும் கோபப்படுகிறார்.
எனவே மருத்துவரிடம் சென்று பார்க்கும் பொழுது அவர் நாம் எல்லாரும் கற்பனை உலகில் வாழ்வது உண்டு ஆனால் அதில் இவர் எல்லையை மீறி போய்விட்டதாக கூறுகிறார் இப்படிப்பட்ட நிலையில் பிரியா பவானிசங்கர் வேலை செய்யும் இடத்தில் அவரை யாரோ தவறாக அப்ரோச் செய்ய தனக்கு நடந்த பிரச்சனைகளை எஸ்.ஜே சூர்யாவிடம் கூறுகிறார்.
மேலும் இதற்கும் மேல் நம்மளுக்கு இடையில் சண்டை வரக்கூடாது எனவும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என சொல்ல அந்த நேரத்தில் நான் என்ன பொம்மையா என பிரியா பவானி சங்கர் கேட்க எஸ்.ஜே.சூர்யாவிற்கு மேலும் கோபம் ஏற்படுகிறது இவ்வாறு டிரைலரில் இந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பொம்மை படத்தினை பார்த்த இயக்குனர் நெல்சன் தனது விமர்சனத்தை கூறியுள்ளார். அதில் எஸ்.ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கரின் நடிப்பு சிறப்பாக இருந்தது ராதா மோகனின் இயக்கம் மிரட்டல், அனைத்தையும் மிஞ்சுகிறது யுவனின் இசை பொம்மை படத்திற்கு வாழ்த்துக்கள் என பதிவை தெரிவித்துள்ளார். இவ்வாறு நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து ஏற்கனவே மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.