தமிழ் சினிமா உலகில் டார்க் காமெடி கலந்த சிறப்பான படங்களை கொடுத்து அசத்திவர் இயக்குனர் நெல்சன். இவர் இயக்கத்தில் உருவான டாக்டர், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தளபதி விஜய்க்கு அடுத்ததாக பீஸ்ட் படத்தின் கதையைக் கூறி உள்ளார்.
ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளை வைக்க விஜய் சொன்னதை அடுத்து ஒரு வழியாக சில மாற்றங்களை செய்து படம் உருவானது மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் கோலாகலமாக ரிலீசானது ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக போகாததால் வசூலில் பின்தங்கியுள்ளது.
இந்த படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே ரஜினிக்கு கதை சொல்லி கமிட் ஆனார் நெல்சன். பீஸ்ட் படத்தைப் பார்த்த ரஜினி அதிர்ச்சி அடைந்தார் ஏனென்றால் படத்தில் பல லாஜிக் மீறல், காமெடி சரியாக ஓடவில்லை என்பதை நன்கு உணர்ந்து விட்டார் அதன்பின் தனது 169 வது திரைப்படத்தை நெல்சன்னுக்கு கொடுக்கலாமா.. வேண்டாமா.. என யோசிக்க ஆரம்பித்தார்.
ஆனால் நெல்சன் மீது மறுபக்கம் ரஜினிக்கு அதிக நம்பிக்கை இருந்தது ஒரு வழியாக ரஜினியின் 169 திரைப்படத்தின் இயக்கும் வாய்ப்பை உறுதியாக நெல்சன் பெற்றுள்ளார். இருப்பினும் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்வதற்காக ரஜினி நெல்சனை இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை கூப்பிட்டு கதையில் நன்கு அறிந்து.
அதில் மாற்றங்களை செய்து வருகிறார்களாம் நிச்சயம் 169 திரைப்படம் மிகப்பெரிய பெரிய அளவில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் தனுஷுக்கு ஒரு கதையைக் கூறியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.