பீஸ்ட் படம் தோல்வி விளிம்பில் இருக்க காரணம் நெல்சன் கிடையாது.? மொத்த கதையையும் மாற்றி அமைத்த முக்கிய பிரபலம்.

vijaya-and-nelson-
vijaya-and-nelson-

தமிழ் சினிமா உலகில் ரஜினி விஜய் அஜித் ஆகியவர்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் அவரது திரைப்படங்கள் எப்பொழுதுமே வெற்றியை கண்டு வருவதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் அடித்து நொறுக்கும். இதனால் அவர்கள் தொட முடியாத உச்சத்தை எட்டுகின்றன.

அந்த வகையில் ரஜினியின் அண்ணாத்த அஜித்தின் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பீஸ்ட் இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர் படம் ஒருவழியாக கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியானது.

படம் ஆக்ஷன் காமெடி கலந்த திரைப்படமாக உருவாகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது நாட்கள் செல்லச் செல்ல படத்தின் வசூலும் குறைந்து கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்கு இப்படி ஒரு அவளை நிலை ஏற்பட யார் காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இந்த படத்தின் கதையை விஜய்க்கு சொல்லும் பொழுது குடும்பம் கலந்த காமெடி கதையைத்தான் கூறியிருந்தார் ஆனால் விஜய் அதில் சில மாற்றங்கள் செய்து ஆக்சன் கலந்த திரைப்படமாக மாற்றுமாறு இயக்குனருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். விஜய் கால்ஷீட் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இயக்குனரும் சரியான சில மாற்றங்களை செய்து படத்தை எடுத்துள்ளார்.

அதுவே இந்த படத்தின் தோல்விக்குக் காரணமாக கூறப்படுகிறது. விஜய் படத்தின் கதையில் மாற்றம் செய்யவில்லை என்றால் நிச்சயம் இந்த படம் வேற லெவல் இருந்திருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். எது எப்படியோ பீஸ்ட் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.