தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் அதன் பிறகே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து திரை படம் இயக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்ட நமது இயக்குனர் அதன் பிறகு தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தன.
ஆனால் அந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு நெல்சன் இயக்கிய இந்த பீஸ்ட் திரைப்படம் இருந்தது என்பதே உண்மை. மேலும் இந்த திரைபடத்தை ரசிகர்கள் பலரும் விஜய்காக மட்டுமே பார்த்தார்கள் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு நமது இயக்குனர் சுமார் 8 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார்.
இவ்வாறுதான் தோல்வியடைந்த திரைப்படத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கிய நமது இயக்குனர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் ரஜினி திரைப்படத்தை நெல்சன் தான் இயக்கி வருகிறார் இந்நிலையில் அவருக்கு இந்த திரைப்படத்தில் 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

அது மட்டுமில்லாமல் நமது இயக்குனர் பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு ஆக தனது சம்பளத்தை 12 கோடி வரை ஏற்றி விட்டார் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் இவர் இதுவரை எத்தனை கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்று இதுவரை தெரியவில்லை என பலரும் கூறி உள்ளார்கள்.