அங்க தொட்டு இங்க தொட்டு கமல் படத்தின் காப்பிதான் ஜெயிலரா.? விளக்கம் கொடுத்த நெல்சன் திலீப்குமார்..

Nelson DilipKumar: ஜெயிலர் திரைப்படம் விக்ரம் படத்தின் காப்பி என விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் இதற்கு நெல்சன் திலீப்குமார் விளக்கம் அளித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த, தர்பார் போன்ற திரைப்படங்களின் தோல்விக்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி அன்று வெளியானது.

எனவே ரசிகர்களும் மிக ஆர்வமுடன் திரையரங்கிற்கு சென்ற நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. எனவே நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் அனைவருக்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது அந்த வகையில் ஒரு வாரத்தில் 375 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதுவரை 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. எனவே தங்களது வெற்றியை கொண்டாடும் வகையில் ரஜினிக்கு எம்.யு.டபள்யூ, அனிருத் மற்றும் நெல்சன் திலீப்குமாருக்கு போர்ஷே போன்ற கார்கள் மற்றும் செக்கை கலாநிதி மாறன் வழங்கினார்.

அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனது. ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பிளே லிஸ்ட் காட்சிகள் தந்தை-மகன் உறவு, மாமனார்-மருமகள் உறவு உள்ளிட்டவை அப்படியே விக்ரம் படத்தை பார்த்து எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நெல்சன் தற்பொழுது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், லோகேஷ் கனகராஜிடம் கடந்த ஆண்டே ஜெயிலர் படத்தின் கதையை சொல்லிவிட்டேன் விக்ரமிலும் இது போன்ற விஷயங்கள் இருப்பதாக கூறினார். இரண்டு படத்தின் ஆரம்பமும் ஒரே மாதிரி இருந்தாலும் கதை டேக் ஆஃப் ஆனா பிறகு வேறு மாதிரி இருக்கும் என்றேன் நான். விக்ரம் காட்சிகள் போல டெய்லரிலும் வர வேண்டும் என வேண்டுமென்று செய்யவில்லை.

விக்ரம் ரிலீசுக்கு முன்பாகவே இந்த கதையை சொன்னேன் அதேசமயம் இரண்டு படங்களும் ஒரே மாதிரி முடிந்தாலும் எதையும் மாற்ற நான் விரும்பவில்லை அப்படி மாற்றினால் நான் எழுதிய ஸ்கிரிப்டில் பிரச்சனையாகிவிடும் இரண்டு படங்களும் நன்றாக இருந்தால் இரண்டையுமே மக்கள் ரசிப்பார்கள் என்று நம்பினேன் என்றார்.