பீஸ்ட் பட நடிகைக்காக காத்து கிடக்கும் நெல்சன் மற்றும் விஜய்.? கடுப்பாகும் படக்குழு.? .

சினிமா உலகில் நடிகர்கள் ஒரு படத்தை முடித்து விட்ட பிறகே அடுத்த படத்தில் கமிட் ஆவது  வழக்கம் ஆனால் நடிகைகளோ கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தான் காசு பார்க்க முடியும். மேலும்  பட வாய்ப்பையும் அல்ல முடியும் என்பதால் ஒரே சமயத்தில் ஏழு, எட்டு படங்களில் கமிட்டாகிவர்கள்.

அப்படி தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பூஜா ஹெக்டே. இவர்  தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில்  பல்வேறு உச்ச நட்சத்திரங்கள் உடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் இது எல்லாம் ஒரே சமயத்தில் நடிப்பதால் பூஜா ஹெக்டே தற்போது பிசியாக இருக்கிறார்.

தமிழில் முதல் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தாலும் அதன் பின் மற்ற மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி வந்ததால் ஹிட் படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் குட்டையான உடைகளை அணிந்து ரசிகர்களையும் வளைத்துப் போட்டார் அதனால் அவருக்கு தற்போது தென்னிந்திய திரை உலகில் வாய்ப்புகள் உள்ளதால் புகழின் உச்சியில் இருக்கிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட். பீஸ்ட் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு காட்சிகள் முழுமையாக எடுக்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் தொடங்க படயுள்ளது முதலில் சண்டை காட்சிகள் எடுக்கப்பட உள்ளது அதன் பிறகு காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.

இதற்காக விஜய் அயராது நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவோ மற்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே பீஸ்ட் ஷூடிங்கில் அடியெடுத்து வைத்தால்  காதல் சம்பந்தப்பட்ட சீன்களை உடனடியாக எடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளது.

டாப் ஹீரோவானா விஜயும், நெல்சன்னும்  தற்போது அதற்க்காக தான் வெயிட்டிங்கில் இருக்கிறாராம் அந்த அளவிற்கு செல்லம் ரொம்ப பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

Leave a Comment

Exit mobile version