நீயா நானா இந்த வாரம் வடிவேலு ஸ்பெஷல்.! கலக்கல் வீடியோ

நடிகர் வடிவேலு கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயரை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவர் சமீப காலங்களாக சினிமாவில் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வின்னர், சந்திரமுகி, சீனா தானா 001, ஏய்,கிரி, தலைநகரம், மருதமலை, போக்கிரி, திமிரு, மெர்சல், போன்ற பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர் வடிவேலு அவர்கள் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்  இந்நிகழ்ச்சியில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

neeya naana
neeya naana

அந்த நிகழ்ச்சியில் வடிவேலு போன்ற தோற்றம் கொண்ட நகல் இசை கலைஞர்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான  முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் வடிவேலு அவர்கள் விருந்தினராக கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வடிவேலு மறுபடியும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி ஆரவாரமாக தொடங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சி அவரது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment