ஹாலிவுட் தரத்தில் உருவாகும் இந்தியன் 2.. படக்குழு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

0
indian-2
indian-2

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன். திரை உலகில் எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அவர் கடைசியாக லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து நடித்த விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.  விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கமலுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

அந்த வகையில் ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம் பண்ண இருக்கிறார். அதற்கு முன்பாக பல வருடங்களாக  கிடப்பில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்தை  முடிக்க விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க நல்ல கருத்து அதேசமயம் ஆக்சன்  படமாக உருவாகி வருகிறது.

அதே சமயம் இந்த படத்தில் செண்டிமெண்ட் சீன்களும் நிறையாக இருக்கும் என சொல்லப்படுகிறது படத்தில் கமலுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த், சமுத்திரக்கனி மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் எடுத்து வருகிறது அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் ஷங்கர் பிரமாண்டமாக  எடுத்து வருகிறார். இப்போ சென்னையில் அருகே சதுரங்க பட்டினத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதுவும் சண்டை காட்சிகள் செம்ம ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது கமல் இந்த படபிடிப்பில் உற்சாகமாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு தளத்தில் கமல் வெளிநாட்டவர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகரப்பட்டு வைரல் ஆகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படபிடிப்பு முடியல அதுக்குள்ளேயே விளம்பரமா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து வெளிவந்த புதிய புகைப்படம்..

indian-2
indian-2