மார்டன் உடையில் ரொமான்டிக்காக கை கோர்த்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.!! வைரலாகும் புகைப்படம்.

0

nayathara with vignesh shivan photo viral :நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் கேரளாவிற்கு ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஊரடங்கு முடிந்த காரணத்தினால் கோவாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் கோவாவிற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாளை கோவாவில் விக்னேஷ் சிவன் மற்றும் அவரின் தாயார் உடன் இணைந்து சிறப்பாக கொண்டாடினார்கள். அதனைத் தொடர்ந்து 18 ஆம் தேதி விக்னேஷ் சிவனுக்கும் பிறந்த நாள்.

தனது காதலரின் பிறந்த நாளை வெகு சிறப்பாக நயன்தாரா, பாட்டுக்கச்சேரி, லைட் செட்டிங் விதவிதமான கேக் என சிறப்பாக கொண்டாடினார். இவை அனைத்தையுமே அவர் சர்ப்ரைசாக செய்து வீடியோவாக இணையதளத்தில் வெளிவந்தது.

அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் டூர் என அனைத்தும் முடிந்ததோடு சேர்த்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் தொடக்கமும் நடந்தது எனவும் கூறுகின்றனர்.

மேலும் இவை அனைத்தும் முடிந்து தற்போது கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்னை வந்து இறங்கி உள்ளனர். நயன்தாராவே தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.