மத்தவங்களுக்கு ஒரு ரூல்ஸ் உங்களுக்கு ஒரு ரூல்ஸ் சா.. நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Nayanthara photo : மலையாள நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் சரத்குமார் நடிப்பில் உருவான ஐயா படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு ரஜினியுடன் சந்திரமுகி, அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் பிகில்,  சிவகார்த்திகேயன் உடன் வேலைக்காரன் என டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவன்  மீது காதல் வயப்பட்டார் அதன் பிறகு இந்த ஜோடி 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இப்பொழுதும் வருடத்திற்கு இரண்டு படங்களிலாவது நடித்து வருகிறார் ஆனால் அந்த படங்கள் பெருமளவு வெற்றி பெறவில்லை கடைசியாக இவர் நடித்த ஜவான் படம் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

சினிமாவில் நடிப்பையும் தாண்டி தயாரிப்பதால் நல்ல காசு வருகிறது இருந்தாலும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சில தொழில்களை தொடங்கியும் வருகிறார் அந்த வகையில்  Lip balm கம்பெனியை நடத்தி வருகிறார் அதிலேயே நல்ல வருமானம் கிடைத்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய கம்பெனியையும் நயன்தாரா ஆரம்பித்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

ஆறு வருட அயராத முயற்சியையும் அன்பையும் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியல் அதிகரிக்கப்படும் சூத்திரங்களுடன் உங்களைப் போலவே தனித்துவமான தயாரிப்புகளை குணப்படுத்துவதில் நாங்கள் எங்கள் இதயங்களை செய்துள்ளோம் மேலும் உங்கள் சுய பாதுகாப்பு வழக்கத்தை மேம்படுத்த படும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுய காதல் பயணத்தில் எங்களுடன் இணைந்து ஆரோக்கியமான ஒளிரும் சருமத்திற்கு வணக்கம் சொல்லுங்கள் @9SKINOfficial ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.. 9SKIN பயணம் செப்டம்பர் 29ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட இருக்கிறது என கூறி உள்ளனர்.

இதற்காக நயன்தாரா தொடர்ந்து கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு அசத்தி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் மத்தவங்க விளம்பரத்தில் கவர்ச்சி காட்ட மறுக்கும் நீங்க உங்க விளம்பரத்தில் கவர்ச்சி தூக்கலா இருக்கு எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.  இதோ நீங்களே பாருங்கள்.

Nayanthara
Nayanthara
Nayanthara
Nayanthara