நயன்தாராவின் அடுத்த படம் திரையங்கில் இல்லை.? ஏமாற்றம் அடையும் ரசிகர்கள்.!

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே அஜித், விஜய், ரஜினி, போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழை தாண்டி பாலிவுட்டிலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஒரு படத்தில் நடித்து வருவதால் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.

தமிழ் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளவர் நயன்தாரா. இப்படி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக ஜொலித்து வரும் நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற காதல், காமெடி கலந்த ஒரு திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

இந்த படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அமோகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதைத்தொடர்ந்து நயன்தாரா கோல்டன், லயன், காட்ஃபாதர், கனெக்ட் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

அதில் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்றான ஆக்சிஜன் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தை ஜிகே விஷ்ணு என்பவர் இயக்கி வருகிறார். இதனிடையே நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நெற்றி கண், முக்குத்தி அம்மன் போன்ற பல படங்கள் ஹாட்ஸ்டார் இல் நேரடியாக ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தனை அடுத்து தற்போது நயன்தாரா நடித்துவரும் ஆக்சிஜன் படமும் ஹாட்ஸ்டார் இல் வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதோ ஹாட்ஸ்டார் இல் இருந்து வெளியாகியுள்ள ஆக்சிஜன் பட ப்ரோமோ வீடியோ.