லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதைத் தொடர்ந்து சோலோவாகவும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் இப்படியிருக்க பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணைந்து ஒரு புதிய படத்தை நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா உடன் இணைந்து ஏற்கனவே தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை அவருடன் இணைந்து மலையாளத்தில் வெளியான “லூசிபர்” படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் நயன்தாரா.
“லூசிபர்” தெலுங்கு ரீமேக் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் என்பதை சமீபத்திய இயக்குனர் ராஜா உறுதிப்படுத்தினார். இந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் இவர் கைகோர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் வெளியான லூசிபர் திரைப்படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும் மற்றும் gangster ராகவும் நடித்து அசத்தியிருந்தார்.
அந்த திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது அதை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ரீ மேக்கில் சூப்பராக உருவாகி வருகிறது. ஆனால் இந்த படத்தின் கதையை சற்று மாறுதல் செஞ்சி சிரஞ்சீவிக்கு ஏற்றது போல எடுத்து வருகிறார் இவருடன் சேர்ந்து நயன்தாரா நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேறு வழி உள்ளது.
மேலும் நயன்தாராவும் மோகன் ராஜாவின் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைவதால் தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

