செம ஸ்டைலான லுக்கில் நயன்தாரா புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே லேடி சூப்பர் ஸ்டாராக இடம்பிடித்தவர் நடிகை நயன்தாரா, இவர் தமிழில் அஜித், விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், இந்த நிலையில் தற்பொழுது ரஜினியின் தலைவர் 168 படமான அண்ணாத்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபகாலமாக நயன்தாரா கதைக்கு முக்கியத்துவம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், சீனியர் நடிகர்களுடன் நடித்த நயன்தாரா தற்போது இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி உடன் அவர் நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது.

இந்த நிலையில் நயன்தாரா எந்த ஒரு பட பிரமோஷன் விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார். அதேபோல் பட விழாக்கள் மட்டுமல்லாமல் மற்ற விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று மகளிர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாக கொண்டாடப்பட்டது.

அதேபோல் சென்னையில் வருமான வரித்துறை சார்பில் நடந்த பெண்களுக்கான விழாவில் நயன்தாரா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அப்பொழுது அவர் ஸ்டைலான லுக்கில் வந்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

nayanthara
nayanthara

Leave a Comment