லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து கொண்டு இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதுதான் ரசிகர்களை சற்று வருத்தமடைய செய்து வருகிறது.
இதுப்பற்றி விக்னேஷ் சிவனிடம் கேட்டால் கல்யாணம் என்பது சாதாரண ஒன்றல்ல பெரிய விஷயம் அதற்கான காசுகளை ரெடி செய்து கொண்டு தயாராக திருமணம் செய்யவேண்டும் என கூறுகிறார் இப்படிப் பார்த்தால் இருவரும் தொடர்ந்து சினிமாவில் பல்வேறு படங்களில் பயணித்து வசூல் வேட்டை நடத்துகின்றனர்.
நயன்தாரா தனது காதலின் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் மறுபக்கம் டாப் நடிகர்கள் மற்றும் சோலோ படங்களிலும் நடித்து அசத்துகிறார் இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் வெளிநாடுகளில் தனது நண்பர்கள் மூலம் பல்வேறு பிசினஸ்ஸில் முதலீடு செய்து நன்றாகவே காசு பார்க்கிறார்கள்.
விக்னேஷ் சிவனும் தொடர்ந்து சினிமாவில் படங்களை இயக்குவதையும் தாண்டி டாப் நடிககளில் படங்களுக்கு பாடலையும் பாடி அசத்துகிறார் இதனால் இருவருக்கும் நாலாபக்கமும் காசுகள் குவிகின்றன. இருப்பினும் இருவரும் திருமணம் செய்து கொண்டது கிடையாது. விக்னேஷ் சிவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் தற்போது தனது காதலி நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர்களை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் படத்தை இயக்க உள்ளார் அதற்கு முக்கிய காரணம் நயன்தாரா தான் என கூறப்படுகிறது நயன்தாராவின் சிபாரிசு மூலமாகத் தான் விக்னேஷ் சிவன் முதலில் அஜித்தை பார்த்து அதன் பின் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது காதலன் நயன்தாராவுடன் பொழுதை கழிக்கிறார் அண்மையில் கூட நயன்தாராவின் அப்பாவின் பிறந்த நாளிற்காக கேரளா சென்று வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வெகு விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் உலா வருகின்றன. நயன்தாராவும் கூட திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வார் விக்னேஷ் சிவன் தொடர்ந்து சினிமா உலகில் தனது அசுர வளர்ச்சியை எட்டுவார் என தெரியவருகிறது.