இந்திய அளவில் பிரபல முன்னணி நடிகருடன் நடிக்க இருந்த நயன்தாரா! வாய்ப்பை தட்டி தூக்கிய தேசிய விருது நடிகை.!!

மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று கதைகளை தேர்வு செய்து நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் கடைசியாக நடித்த வரலாற்று திரைப்படமான பாகுபலி திரைப்படம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுதந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

அந்தவகையில் மீண்டும் இவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று கதையான ராமர் கதாபாத்திரத்தை தேர்வு செய்தி நடிக்கவுளளதாக முடிவெடுத்துள்ளார்.  பிரபாஸ் ராமர் என்றால் இவருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த வண்ணமே உள்ளது.

ஏற்கனவே நயன்தாரா அவர்கள் ராமஜெயம் என்ற திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ளதால் மீண்டும் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர். ஆனால் திடீரென படக்குழு சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளார்களாம்.

கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியின் வரலாற்றுப் படத்தில் நடித்ததற்காக நடிகையர் திலகம் பட்டத்தைப் பெற்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனாலேயே கீர்த்தி சுரேஷை  இத்தரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இந்த திரைப்படத்திற்கு அதிபுருஷ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த திரைப்படம் ஓம் ராவத்  இயக்கத்தில் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட உள்ளது.

மேலுும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்ற பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

Exit mobile version